ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'. இப்படம் பான் இந்தியா படமாக இந்த வாரம் ஜுலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எஸ்ஜே சூர்யா கலந்து கொண்டு தெலுங்கில் பேசினார். “ஷங்கர், கமல் பேசும்போது யார் இந்தியன் என்பது குறித்து பேசினார்கள். இந்தியாவிற்காக யார் சிறந்ததைச் செய்கிறார்களோ அவர்களே உண்மையான இந்தியன். இங்கே ஒரு இந்தியன் இருக்கிறார், அவர் எனக்குச் சிறந்த நண்பர். அவர்தான் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண். எனது நண்பர் பவன் கல்யாண் ஆந்திராவின் முதல்வராக வருவார் என்று மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்னேன். அதில் பாதி தற்போது நடந்துள்ளது, மீதி நடப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இந்த மேடையில் அவரைப் பற்றி நினைவு கூர்வது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
பவன் கல்யாண் பற்றி எஸ்ஜே சூர்யா பேசியதும் அரங்கில் இருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர். அந்த சத்தம் அடங்க கொஞ்ச நேரம் ஆனது.