'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. இந்தப் படம் இதுவரையில் சுமார் 900 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 150 கோடி வசூலித்தால் 1000 கோடி வசூலைக் கடக்கும் படமாக அமையும். அப்படி அமைந்தால் தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' படங்களுக்குப் பிறகு அந்த சாதனையைப் புரியும் மூன்றாவது படமாக பட்டியலில் இடம் பெறும். இருந்தாலும் இந்த வாரம் வெளியாக உள்ள 'இந்தியன் 2' படம் அந்த சாதனைக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்பது இந்த வாரத்தில் தெரிந்துவிடும்.
'கல்கி 2898 ஏடி' படம் உலக அளவில் மொத்தமாக சுமார் 370 கோடி ரூபாய் அளவு வசூலித்துள்ளது. மொத்த வசூலான 900 கோடியில் நிகர வசூலாக 440 கோடி வரையில் கிடைக்கும். இதனால் தற்போதைக்கு சுமார் 70 கோடி லாபத்தில் அந்தப் படம் உள்ளது. முந்தைய பிரபாஸ் படங்களுடன் ஒப்பிடுகையில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு இந்தப் படம்தான் அவருக்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது.