ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் |
சிம்பு, பிரபுதேவாவுடன் நெருங்கி பழகியபோதெல்லாம் நயன்தாரா கர்ப்பிணியான செய்தி வெளியாகவில்லை. ஆனால், இப்போது அவர் கர்ப்பிணியாகியிருப்பதாக ஐதராபாத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியென்றால் அதற்கு யார் காரணம்? என்று ஆந்திராவாலாக்களிடம் விசாரித்தால், அச்செய்தி புஷ்வானமாகி விட்டது.
ஆமாம், இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படம்தான் தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. இப்படத்தில் வித்யாபாலன் வேடத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு கர்ப்பிணியாக இருந்தால் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் எப்படி எப்படி நடப்பார்கள் என்பது பற்றியெல்லாம் விளக்கி பயிற்சி கொடுத்து வருகிறார்களாம். இதனால் கடந்த ஒரு வார காலமாக கர்ப்பிணி போன்றே தனது கெட்டப்பை மாற்றி அதுவாகவே வாழ்ந்து ரிகர்சல் பார்த்தவர், தற்போது அப்படத்தில் நடிக்கிறாராம்.
ஏற்னவே வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் தமிழ், மலையாள ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, இந்த படத்தின் கேரக்டர் தன்னை ரொம்ப பாதித்ததால் விரும்பி ஏற்று நடித்து வருகிறாராம்.