'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் நான்கு நாட்களில் ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அந்த 500 கோடியில் அமெரிக்க வசூல் மட்டுமே 83 கோடி. அங்கு 10 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. முதல் வார இறுதியில் வேறு எந்த ஒரு இந்தியப் படமும் இந்த அளவிற்கு வசூலித்ததில்லை என அங்கு படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இப்படம் பெறும் வசூல் குறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸிற்கு இந்தப் படம் பெரிய வசூலை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை டோலிவுட்டில் ஏற்பட்டுள்ளது.