ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமானது.
'விடாமுயற்சி' படத்தின் தலைப்பை அறிவித்து படப்பிடிப்பை துவக்கிய நிலையில், பல மாதங்களாக வேறு எந்தவிதமான அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அஜித் தனது அடுத்த படமான ‛குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க சென்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்பில் விபத்து ஏற்படுவது போன்ற காட்சி படமாக்கப்பட்ட வீடியோ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. மேலும், படம் கைவிடப்படவில்லை என்பதையும் படக்குழு தெரிவித்தது. இடையிடையே குட் பேட் அக்லி படப்பிடிப்பிலும் கலந்துகொண்ட அஜித், தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'விடாமுயற்சி' பற்றிய அறிவிப்பு இன்று (ஜூன் 30) இரவு 7:03 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அஜர்பைஜானில் தனியாக ரோட்டில் பையுடன் நடந்து வருவது போல இருக்கும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். போஸ்டரில் தலைப்பை விடாமுயற்சி திருவினையாக்கும் என குறிப்பிட்டிருப்பதுடன், கீழே ‛அவர் பாதையில்...' எனவும் கூறியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சார்பில் பர்ஸ்ட்லுக் வெளியானது, அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக தான் ‛குட் பேட் அக்லி' படத்தின் செகண்ட் லுக் வெளியானது.