நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மலையாள நடிகர் சங்கத்திற்கு (அம்மா) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.
கடந்த இரண்டு முறை தலைவராக இருந்த மோகன்லால் பணிச்சுமை காரணமாக இந்த முறை அவர் அவர், மீண்டும் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் வெளியாயின. இதனால் நடிகர்கள், குக்கு பரமேஸ்வரன், அனூப் சந்திரன், ஜெயன் செர்தாலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் மோகன்லால், ஒருமனதாகத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அந்தப் பதவிக்குப் போட்டியிட இருந்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.