சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கன்னட திரையுலகில் பிரபல நடிகரான தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி டார்ச்சர் கொடுத்தார் என்பதன் காரணமாக தர்ஷன் இந்த கொலையை செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த வழக்கில் தர்ஷனுடன் பவித்ரா கவுடா உட்பட 10 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னட திரையுலகை சேர்ந்த கிச்சா சுதீப், உபேந்திரா நடிகை ரம்யா உள்ளிட்டோர் ரேணுகா சுவாமியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தர்ஷனுக்கு எதிராக கருத்துக்களை கூறியுள்ளனர்.
அதே சமயம் நடிகை சஞ்சனா கல்ராணி தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் பிரபல கன்னட நடிகை ரட்சிதா ராம், தர்ஷனின் கைது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். ரட்சிதா ராம் கன்னடத்தில் அறிமுகமானது தர்ஷன் கதாநாயகனாக நடித்த புல்புல் என்கிற படத்தில் தான். அதை தொடர்ந்து வரிசையாக அவருடன் மூன்று படங்களில் நடித்துள்ளார் ரட்சிதா ராம். கடந்த வருடம் வெளியான கிரந்தி என்கிற படத்திலும் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரட்சிதா.
இந்த நிலையில் தர்ஷனின் கைது குறித்து அவர் கூறும்போது, “திரையுலகில் என்னை அறிமுகப்படுத்திய தர்ஷன் சார் எனது குரு போன்றவர். என்னை வழிநடத்திய அவர் இதுபோன்று ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை நம்புவதற்கே சிரமமாக இருக்கிறது. போலீஸார் உண்மையை வெளியே கொண்டு வருவார்கள் என நான் நம்புகிறேன். மேலும் மீடியா நண்பர்களும் இந்த வழக்கில் வெளிப்படை தன்மையுடன் செய்திகளை வெளியிடுவார்கள் என்றும் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார் ரட்சிதா ராம்.