இன்று 'அமரன்' 100வது நாள் விழா | இன்றைய ரிலீஸ் - 10 படங்களில் 1 மட்டும் மிஸ்ஸிங் | இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் |
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் 'வணங்கான்' . இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சுரேஷ் காமாட்சியின் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் ஜூலை மாதம் ரிலீஸ் என தேதி குறிப்பிடாமல் அறிவித்து இருந்தனர். ஆனால் ஜூலை 12ல் கமலின் இந்தியன் 2 மற்றும் ஜூலை 26ல் தனுஷின் ராயன் படங்கள் வெளியாகின்றன. இதனால் இதன் ரிலீஸ் தள்ளிப்போகும் என தெரிகிறது. அதன்படி இத்திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.