வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு |
நடிகர் கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படமாக 'வா வாத்தியார்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இதில் எம்.ஜி.ஆர் ரசிகர் ஆக கார்த்தி நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ஆன பேண்டஸி விஷயங்கள் உள்ளது என்கிறார்கள்.
இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு விரைந்து பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.