தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது தமிழில் வேட்டையன், இந்தியன் 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், நயன்தாரா - விக்னேஷ் சிவன் நடத்தி வரும் டிவைன் புட்ஸ் என்ற நிறுவனத்தில் சமீபத்தில் முதலீடு செய்தார். அதையடுத்து தற்போது வி.எஸ்.மணி அண்ட் கோ என்ற பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்திருக்கிறார். அதோடு, இந்த நிறுவனத்தில் அவர் அம்பாசிடராகவும் உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா என்ற இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் இந்த பில்டர் காபி நிறுவனத்தில் அனிருத் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.