நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குஞ்சாக்கோ போபன் மற்றும் காயத்ரி சங்கர் இணைந்து நடித்த 'என்ன தான் கேஸ் கொடு' என்கிற படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஒரு சாமானியனான குஞ்சாக்கோ போபன் தனக்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடி அரசாங்கத்தையே ஆட்டம் காண வைப்பது போன்று நகைச்சுவையுடன் உருவாகி இருந்த இந்த படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் கடந்த மாதம் சுரேஷிண்டேயும் சுமலதாயுடேயும் ஹிருதயஹரியாய பிரணயகதா என்கிற படம் வெளியானது. இதில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய லிஜி பிரேமன் என்பவர் ரதீஷ் பாலகிருஷ்ணன் மீது சில குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “மோகன்லால் இயக்கியுள்ள பரோஸ் மற்றும் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் ஆகிய படங்களில் நான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறேன். அதை பார்த்துவிட்டு தான் எனக்கு இந்த படத்தில் பணியாற்றும் வாய்ப்பு தேடி வந்தது. ஆனால் இந்த படம் துவங்குவதற்கு முன்பிருந்தே இயக்குனர் தனது ஈகோ காரணமாக பலமுறை என் மனதை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டார். கடுமையான சில வார்த்தைகளை பிரயோகித்தார். 35 நாட்கள் பணியாற்ற வேண்டும் என்றும் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் பேசப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 115 நாட்களில் இந்த படத்திற்காக நான் பணியாற்றியுள்ளேன். ஒரு கட்டத்தில் இயக்குனரின் டார்ச்சர் தாங்க முடியாமல் 75 சதவீத படம் முடிவடைந்த நிலையில் நான் வெளியேறி விட்டேன்.
ஆனால் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே படத்தின் டைட்டில் கார்டில் என் பெயரை சேர்க்க அவர் விரும்பவில்லை. இந்த தகவல் தெரிந்து இயக்குனர் சங்கம் மூலமாக நான் புகார் அளித்தபோது அப்போதைக்கு சரி என்று சொன்னவர், படம் ரிலீஸ் ஆன சமயத்தில் எனக்கு பதிலாக வேறொரு நபரின் பெயரை இடம்பெறச் செய்ததுடன், என் பெயரை உதவியாளர் என்கிற பிரிவில் இடம்பெற செய்து இருந்தார். அது மட்டுமல்ல எனக்கு பேசிய சம்பளத்தில் ஒரு லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் மீதி சம்பளமும் இன்னும் கொடுக்கப்படவில்லை. இந்த படம் ஓடிடியில் வெளியாகும்போது என்னுடைய பெயர் ஆடை வடிவமைப்பாளர் பிரிவில் இடம் பெற வேண்டும் என இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார் லிஜி பிரேமன்.