சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
பெரிய படங்களின் வெளியீடுகளால் சிறிய படங்கள் எப்போதுமே பாதிக்கப்படுகிறது. இந்த சிக்கலைத் தீர்த்து வைக்க யாருமே முன்வருவதில்லை.
ஜூலை மாதம் இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளன. ஜூலை 12ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படம் வெளியாகிறது. ஜூலை 26ம் தேதி தனுஷ், இயக்கி நடித்துள்ள 'ராயன்' படம் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இப்படம் முதலில் ஜூன் 13ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'வணங்கான்' படத்தை ஜூலை வெளியீடு என அறிவித்திருந்தார்கள். இப்போது ஜூலை 12 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு பெரிய படங்கள் வருவதால் 'வணங்கான்' படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்த இரண்டு பெரிய படங்களுக்கு முன்பாக ஜூலை 5ம் தேதி வெளியிட்டாலும், ஜூலை 19ம் தேதி வெளியிட்டாலும் ஒரு வாரம் மட்டுமே தியேட்டர்கள் கிடைக்கும். எனவே, இப்போது 'வணங்கான்' படத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் காரணத்தால்தான் சில தினங்களுக்கு முன்பு 'வணங்கான்' படத் தயாரிப்பாளர் பெரிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் குறித்து “பெரும் படங்களின் ஆக்கிரமிப்பால் அல்லோகலப்படுகிறது, சிறு படங்களின் உழைப்பு,” எனக் கூறியிருந்தால் போலிருக்கிறது.