மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
எக்ஸ் தளம், டெஸ்லா நிறுவனங்களின் அதிபர் எலான் மஸ்க். அவருக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில் தமிழ்ப் படமான 'தப்பாட்டம்' படத்தின் காட்சி ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்ட மீம்ஸ் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்டிரா வைத்து குடிக்க, அந்த நாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்டிராவை வைத்து நாயகன் குடிக்கும் ஒரு காட்சி அது. 2017ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர், டோனா ரொசாலியோ நடித்த படமான 'தப்பாட்டம்' படத்தின் அந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக பல முறை பரவியிருக்கிறது.
“ஐபோன், ஆப்பிள், டேட்டா” ஆகியவற்றை மையமாக வைத்து யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை இன்று எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அதனால், தற்போது அந்த மீம்ஸ் மீண்டும் வைரலாகியுள்ளது. ஒரு தமிழ்ப் படத்தை வைத்து உருவாக்கிய மீம்ஸை எலாக் மஸ்க் உலக அளவில் பிரபலமாக்கிவிட்டார்.
ஹீரோ நன்றி
‛‛காலையில் இருந்தே போன் கால்ஸ் வந்து கொண்டே இருக்கிறது. தப்பாட்டம் படம் என்னுடைய முதல் படம். எலான் மஸ்க் அந்த படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். அதற்காக அவருக்கும், இந்த போட்டோவை அவரிடமும் கொண்டு போய் சேர்த்த ரசிகர்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார் இப்பட ஹீரோ துரை சுதாகர்.