ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஐதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த மாபெரும் நிகழ்ச்சி ஐதராபாத் விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள "சமத்துவ சிலை" என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான ராமானுஜரின் சிலை அருகில் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ் நாலாயிர திவ்ய பிரபந்தம் (4000 திவ்ய பிரபந்தம் என்பது கி.பி 8ம் நூற்றாண்டுக்கு முன்னர் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட 4,000 பாடல்களின் தொகுப்பாகும். ஆழ்வார் என்ற சொல்லுக்கு "முழ்கி இருப்பவர்" என்று பொருள். அவர்கள் தங்கள் இறைவனான விஷ்ணுவிடம் பக்தி மற்றும் அன்பில் மூழ்கியதால் அவர்கள் அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்) இசைஞானி இளையராஜா, நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களுக்கு சிம்பொனி இசை இசைக்கப்பட்டது.
முன்னதாக இளைய ராகம் இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மடாதிபதி சின்ன ஜீயர் சுவாமிகள், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படும் திராவிட வேதம், தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஆற்றிய பங்களிப்பு குறித்து மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தெலுங்கானா தமிழ்ச் சங்கம் தனது பேராதரவை அளித்திருந்தது.
தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தலைவர் போஸ், துணைத்தலைவர் தர்மசீலன், பொதுச் செயலாளர் ராஜ்குமார் சிவாஜி, பொருளாளர் நேரு சாஸ்திரி துணைப்பொருளாளர் குமராராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த சமத்துவ சிலை நிர்வாகிகளுக்கு தெலுங்கானா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.