நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
நடிகர் விஜய் கடந்தாண்டில் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளை பாராட்டி பரிசளித்தார். அந்த வகையில் இந்த ஆண்டும் அந்த பாராட்டு விழா நடைபெறப் போகிறது. அதுகுறித்து இன்று விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தமிழக வெற்றி கழகம் சார்பாக நடிகர் விஜய் பாராட்ட உள்ளார்.
முதல் கட்டமாக 28-6-2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. அதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாணவ மாணவிகளை பாராட்டுகிறார்.
அதையடுத்து இரண்டாம் கட்டமாக 3-7-2024 புதன் கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு தங்களது பெற்றோர்களின் முன்னிலையில் சான்றிதழும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.