'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. இவரும் நடிகர் தான். ‛அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் காதல் மலர, சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருமணம் தொடர்பான சடங்குகள் நடந்தன. இந்நிலையில் இன்று(ஜூன் 10) காலை சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதி - ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்தது. இதில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறவுகள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர்கள் விஷால், செந்தில் உள்ளிட்ட ஒரு சில திரைப்பிரபலங்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
திருமண வரவேற்பு ஜூன் 14ல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.