ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார். இதனால் பிரேம்ஜியின் சகோதரர் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் யாரை பார்த்தாலும், ‛‛பிரேம்ஜிக்கு எப்போ கலயாணம்'' என்றே பலரும் கேட்டுவந்தனர்.
இந்த நிலையில் பிரேம்ஜிக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக திருமண பத்திரிக்கையுடன் செய்தி ஒன்று வெளியானது. இது உண்மைதானா என்ற சந்தேகம் எழுந்தாலும், வெங்கட்பிரபு, அந்த பத்திரிகையில் குறிப்பிட்டது உண்மைதான், பிரேம்ஜிக்கு ஜூன் 9ல் திருமணம் என்றும், மிகவும் நெருங்கிய வட்டத்தை அழைத்து நடக்கவுள்ளதால் தங்களின் ப்ரைவஸிக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் பிரேம்ஜியின் நிச்சயம் முடிந்து இன்று திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெறுகிறது. பிரேம்ஜி - இந்து இருவரின் நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஜோடிக்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.