'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த மாதத்தில் அஜித்தின் குட் பேக் அக்லி படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றபோது அருகில் உள்ள ஸ்டுடியோவில் சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படப்பிடிப்பு நடைபெற்றது. இதை அறிந்த அஜித்குமார் அங்கு சென்று சிரஞ்சீவியை சந்தித்து நலம் விசாரித்தார். அது குறித்த புகைப்படங்கள் அப்போது வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அஜித்தின் மனைவியான ஷாலினி மற்றும் அவரது தங்கை ஷாம்லி அவர்களது சகோதரர் ரிச்சர்ட் ஆகிய மூன்று பேரும் சிரஞ்சீவியை நேரில் சந்தித்துள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ஷாம்லி.
சிரஞ்சீவி - ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஜெகடேகா வீருது அதிலோக சுந்தரி என்ற தெலுங்கு படத்தில் அவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக தாங்கள் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதோடு, சிரஞ்சீவி சாரின் அன்பு என்றும் மாறாதது என்றும் ஷாம்லி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.