குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'அஞ்சாமை'. இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மருத்துவத் தேர்வு கல்வி முறையில் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம்.
வருகிற 7ம் தேதி வெளிவரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். படம் குறித்து வாணி போஜன் கூறியதாவது: இந்த படம் நாட்டில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசுகிறது. இந்த படம் தொடங்கியதில் இருந்து இன்று வரை இந்த படத்தின் மீது பெரிய மரியாதை இருக்கிறது. இதில் நான் நடித்ததை என்னென்றைக்கும் பெருமையாக சொல்லிக் கொள்வேன். என்றார்.
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் வாணி போஜன். அழகு, திறமை இருந்தபோதும் அவரால் முன்னணி இடத்திற்கு இன்னும் வரமுடியவில்லை. தொடர்ந்து அதற்காக போராடிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது
“எந்த பின்புலமும் இல்லாமல் இருந்து இந்த இடத்திற்கு நான் வந்திருப்பதே பெரிய விஷயம்தான். நீங்கள் குறிப்பிடும் முன்னணி இடமெல்லாம் எனக்கு தேவையில்லை. நல்ல நடிகை என்ற பெயர் மட்டும் போதும். வாரிசு நடிகைகள் என்றால் நிச்சயமாக அவங்களுடைய அறிமுகம் பெரியதாக இருக்கும். ஆதரவளிக்க ஒரு நான்கு பெரிய நடிகர்கள் வருவார்கள். அடுத்தடுத்த படங்கள் குவிகிறது. அது எல்லாம் தவிர்க்க முடியாதவை. ஆனால் நிலைத்து நிற்க அவர்கள் போராடித்தான் ஆக வேண்டும்.
வாரிசு என்பது எல்லா துறைகளிலும் உள்ள விஷயம்தான். சினிமா துறையிலும் அப்படித்தான். என்னை மாதிரி நிறையப் பெண்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும். நல்ல நடிகைகளைப் பார்க்கும்போது, இந்த நடிகைக்கு எப்போது அந்தப் பெரிய அறிமுகம் கிடைக்கும் என்று தோன்றும். ஆனால் மக்கள் உண்மையாக இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட நடிகை, யாராக இருந்தாலும் திறமை இருந்தால் அவர்களை வரவேற்பார்கள். இல்லாவிட்டால் நிராகரிப்பார்கள். பிரபலங்களின் குடும்பத்திலிருந்து வந்ததால், அவர்களுக்கு அதிக வரவேற்பையும் அறிமுக நடிகைகளுக்கு குறைவான வரவேற்பையும் கொடுப்பதில்லை. அதனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்றார்.