நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
'மெரி கிறிஸ்துமஸ்' படத்திற்கு பிறகு வெளிவரும் விஜய் சேதுபதி படம் 'மகாராஜா'. 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் மற்றும் நட்ராஜ் சுப்ரமணியம் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜனேஷ் லோக்நாத் இசை அமைத்துள்ளார், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் கூறியதாவது : கடந்த 14 வருடங்களாக என் மனதில் இருந்த கதை இது. 14 முறை இந்த கதையை திருத்தி செப்பனிட்டிருக்கிறேன். இந்த படம் ஆரம்பிக்கும்போது இது விஜய்சேதுபதியின் 50வது படமாக தொடங்கவில்லை. அது எதேச்சையாக அமைந்தது. இதனால் படத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது வந்தது.
படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதி தேடும் லட்சுமி யார் என்பதை தொடர்ந்து ரகசியமாக வைத்திருப்போம். படம் வெளிவரும்போது அது தெரியவரும், படத்தில் பாரதிராஜாவும், அனுராக் காஷ்யப்பும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். இருவருமே எனக்கு பிடித்த நடிகர்கள் என்பதால் அவர்களை இந்த படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். படப்பிடிப்பு காலங்களில் இவர்கள் இருவரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன்.
படத்தில் விஜய்சேதுபதி சலூன் கடை நடத்துகிறவராக நடிக்கிறார். ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் எளிய மனிதர் அவர். ஆனால் அவரையே இந்த சமூகம் கலைத்து போடுகிறது. தான் யார், தான் தொலைத்தது என்ன? என்பதை தேடி அவர் ஓடுகிறார். அதற்கான விடைகளை அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் அதிகமாக வன்முறை இருப்பதாக கூறி சில காட்சிகளை நீக்கினார்கள், சில காட்சிகளின் நீளத்தை குறைத்தார்கள். அதனால் கதைக்கு பாதிப்பு இல்லை என்பதால் அப்படியே செய்தோம். என்றார்.