அடுத்த மாதம் முதல் 'சலார் 2' படப்பிடிப்பு ? | புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு தன்னம்பிக்கை ஊட்டிய சமந்தா | பேபி ஜான் படத்தில் சல்மான்கான் - அட்லி | அடுத்தவர்களின் கருத்துக்களை தூக்கி சுமக்காதீர்கள் : விமர்சனங்களுக்கு த்ரிஷா பதிலடி | சசி குமாருக்கு ஜோடியாக சிம்ரன் | முதல் முறையாக யுவன் இசையில் பாடிய சந்தோஷ் நாராயணன் | வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் | கூலி படத்தில் இணைந்த விக்ரம் பட பிரபலம் | சரண்யா துராடிக்கு காலில் காயம் | இது டிம்பிள் வீடு : சூட்டிங் வீட்டின் நினைவுகளை பகிரும் நீலிமா |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் கடந்த பல மாதங்களாக 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வந்தார். அனிரூத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதம் ஆனதாக தகவல் பரவியது. இதனால் அஜித் தனது அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கினார்.
இதனால் விடாமுயற்சி படம் மீண்டும் எப்போது துவங்கும் என கேள்வி எழுந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அதாவது 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இன்னும் 10 சதவீதம் மட்டுமே மீதம் உள்ளதாகவும், இம்மாதம் இறுதியில் மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கி விடும் என தகவல் வெளியாகி உள்ளது.