ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. எத்தனையோ சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த யுவனின் பின்னணி இசைக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் இசையமைப்பேன் என்று மற்ற இசையமைப்பாளர்கள் போல அவர் இருப்பதில்லை. புதுமுகங்களின் படங்களுக்கும், வளரும் நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பவர்.
சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இன்று வெளியாகும் 'கருடன்' படத்திற்கு இசையமைத்துள்ளார். அதே போல தெலுங்கில் விஷ்வன் சென் நடித்து இன்று வெளியாகும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்கம் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களுமே கிராமத்தை மையப்படுத்திய ஆக்ஷன் கதைகள்.
இரண்டு படங்களின் டிரைலர்களையும் ரசிகர்கள் திரும்பிப் பார்க்க வைத்ததில் யுவனின் பங்கு உண்டு. இரண்டு படங்களின் பின்னணி இசையும் இப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.
யுவனின் அடுத்த பெரிய வெளியீடாக விஜய் நடிக்கும் 'தி கோட்' பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.