விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்குப் பஞ்சமேயில்லை. நடிகர்களின் வாரிசுகள், இயக்குனர்களின் வாரிசுகள், தயாரிப்பாளர்களின் வாரிசுகள் என பல வாரிசுகள் பல துறைகளில் இருக்கிறார்கள். நடிப்புத் துறையில்தான் வாரிசுகள் அதிகம். இருந்தாலும் ஒரு சிலர் தங்களது தனித் திறமையால் முன்னணிக்கு வந்துள்ளார்கள்.
அடுத்த வாரிசு நடிகராக நாளை மறுநாள் வெளியாக உள்ள 'ஹிட் லிஸ்ட்' படம் மூலம் அறிமுகமாக உள்ளார் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா. இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக ஒரு காலத்தில் இருந்து இப்போது முன்னணி இயக்குனராக உள்ள இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இப்படத்தைத் தயாரித்துள்ளார். சரத்குமார், கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரிடம் சென்று விஜய் கனிஷ்கா வாழ்த்துகளைப் பெற்று வந்தார். அவர்களது வாழ்த்துகளுடன் 'ஹிட் லிஸ்ட்' படத்தில் ஹிட் கொடுத்து முன்னணி நடிகராக உயர்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.