ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஆந்திரா, தெலங்கானா தியேட்டர் உரிமைகளுக்கான வியாபாரம் ஆரம்பமாகி உள்ளது. தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு மிக அதிக விலையை சொல்கிறதாம். ஆனால், வினியோகஸ்தர்கள் அவ்வளவு விலையைக் கொடுக்கத் தயாராக இல்லையாம். அதேசமயம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அட்வான்ஸ் தொகையாகத் தருகிறோம். ஆனால், அதை என்ஆர்ஏ அடிப்படையில் தர மாட்டோம் என்று உறுதியாக இருக்கிறார்களாம்.
புஷ்பா முதல் பாகத்திலேயே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறினார்களாம். இருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் வினியோகஸ்தர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.