4 கோடி பார்வைகளை கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல்! | இயக்குனர் பீம்சிங்கின் 100வது பிறந்தநாள்: நடிகர் பிரபு நெகிழ்ச்சி | ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் படத்தை வெளியிட திட்டம் | 'சித்தார்த் 40' படத்தில் இசையமைப்பாளராக இணைந்த பாம்பே ஜெயஸ்ரீ மகன் | வீர தீர சூரன் படத்திலிருந்து வெளிவந்த துஷாரா விஜயன் பர்ஸ்ட் லுக் | பிரியங்கா சோப்ரா கதை : துஷாரா ஆசை | அதிக படங்கள் நடிக்காததற்கு உடல்நல குறைவு தான் காரணம் : துல்கர் சல்மான் | மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் |
விஷால் நடித்த 'திமிரு' படத்தில் வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அந்தப் படம்தான் அவரைப் பிரபலப்படுத்தியது. பின்னாளில் நிஜ வாழ்க்கையில் அவரே விஷாலுக்கு அண்ணியாகவும் வந்தார். ஸ்ரேயா ரெட்டி பின்னர் “வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில், சலார்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
'சுழல்' வெப் சீரிஸில் நடித்தவர் அடுத்து 'தலைமைச் செயலகம்' வெப் சீரிஸில் கொற்றவை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்புப் பற்றி பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் வெப் சீரிஸின் இயக்குனர் வசந்தபாலன் அவரது முகப்புத்தகத்தில், “கொற்றவை ( sriya reddy ) Very powerful presence. படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் முதல்பட கதாநாயகி போல பதட்டமாக என்னிடம் "நல்லா வருதுல்ல! எப்படி வருது ? நீங்க happy-ஆ? சுழல் அளவுக்கு பேர் வாங்கிடுமா? அதை விட கம்மியா? இல்ல அதிகமா? விலங்கு, அயலி அளவுக்கு வெற்றியடையுமா? உங்களுக்கு புரொடக்சன் சப்போர்ட் பண்றாங்களா? சேனல் happy-ஆ? " என்று ஆங்கிலம் கலந்த தமிழில் ஒரு நாளைக்கு பல்வேறு வார்த்தைகளில் சுத்தி சுத்தி இணையத்தொடரின் தரம், வெற்றி பற்றிய அக்கறையுடனே கேள்வி கேட்டபடியிருப்பார்கள்.
என் மேல் கொண்ட நம்பிக்கையிலே மட்டுமே இந்த தொடரில் நடிக்க சம்மதித்தார்கள். அவரை நடிக்க விடாமல் ஆயிரம் சக்திகள் இடையூறு செய்த போதும் I will do only for vasanthabalan என்று சொல்லி விட்டு எனக்காக தொடருக்குள் வந்தார்கள். தொடரின் வெற்றியில் முதல் மகிழ்ச்சி கொற்றவை தான்,” எனப் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரேயா ரெட்டியை இத்தொடரில் நடிக்க விடாமல் இடையூறு செய்த அந்த ஆயிரம் சக்திகள் யார் என்பதை இயக்குனர் வசந்தபாலன் சொல்வாரா ?.