ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

அகிலன், இறைவன், சைரன் என தொடர் தோல்வி படங்களை தந்து ரசிகர்களை ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'காதலிக்க நேரமில்லை' என்கிற படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மைத் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் 10 நாட்கள் நடைபெற்றது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.