அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
நடிகர் தனுஷ் தனது 50வது படமாக 'ராயன்' என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இத்திரைப்படம் ஜூன் 13ந் தேதி அன்று திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஏற்படும் தாமதத்தினால் ஜூன் 13ம் தேதி ராயன் திரைப்படம் வெளியாவதில் இருந்து தள்ளிப் போவதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைத்ததுள்ளது. மேலும், புதிய ரிலீஸ் தேதியை வருகின்ற நாட்களில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.