நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'சலார்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. இதனிடையே, கடந்த சில வாரங்களாக இப்படம் டிராப் செய்யப்பட்டதாகத் தகவல் வந்து கொண்டிருந்தது. பிரசாந்த் நீல், பிரபாஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்றார்கள்.
இந்த செய்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சற்று முன் பிரசாந்த், பிரபாஸ் 'சலார்' படப்பிடிப்புத் தளத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் 'சலார் 2' படப்பிடிப்பு நிச்சயம் ஆரம்பமாகும் என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார்கள். ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டே 'சலார் 2' படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குவார் எனத் தெரிகிறது.