'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னட திரை உலகில் கதாசிரியர், இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் இயக்குனர் ராஜ் பி.ஷெட்டி. பெரும்பாலும் மலையாள திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள டர்போ திரைப்படத்தில் மெயின் வில்லன் ஆக நடித்துள்ளார் ராஜ் பி.ஷெட்டி. புலி முருகன் பட இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதைப்படி ராஜ் பி.ஷெட்டி தமிழகத்தை சேர்ந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் வசனம் பேச வேண்டிய சூழல் இருந்தது. தமிழில் பேசுவதற்கு ரொம்பவே தடுமாறி உள்ளார் ராஜ் பி.ஷெட்டி. அதே சமயம் மலையாளத்தில் அவர் சரளமாக பேசியதை பார்த்த இயக்குனர் வைசாக் உடனடியாக அவரது கதாபாத்திரத்தை மலையாளியாக மாற்றி மலையாளத்தில் வசனங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவற்றை ஒரே டேக்கில் பேசி ஆச்சரியப்படுத்தினாராம் ராஜ் பி.ஷெட்டி.