''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பெங்களூருவில் கடந்த வாரம் மே 20ம் தேதி போதை பார்ட்டி ஒன்று நடைபெற்றது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது தெரிய வந்தது. அது தொடர்பாக சிலரை கைது செய்தனர்.
தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், மாடல்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகை ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரது பெயர்கள் அதில் அடிபட்டன. ஸ்ரீகாந்த், ஜானி, ஹேமா ஆகியோர் உடனடியாக மறுப்பு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட 73 ஆண்கள் மற்றும் 30 பெண்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆகியோரது சோதனை பாசிட்டிவ்வாக வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் மீதும் வழக்கு பாயும் எனத் தெரிகிறது.
போதை பார்ட்டி நடந்த இடத்திலிருந்து 14.4 கிராம் எம்டிஎம்எ போதை மாத்திரைகள், 1.16 கிராம் எம்டிஎம்எ படிகங்கள், 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 5 கிராம் கோக்கைன், கோக்கைன் தடவப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள், 5 மொபைல் போன்கள், ஒரு வோக்ஸ்வோகன் கார், ஒரு லேண்ட் ரோவர் கார், டிஜே பயன்படுத்தும் ஆடியோ சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.