கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! |
ரஜினி நடித்துள்ள அனிமேஷன் படம் கோச்சடையான். சவுந்தர்யா இயக்கியுள்ள இப்படத்தில் கோச்சடையான், பாணா என்ற இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. அப்பா மகன் என நடித்துள்ள அவரது இளமையான கெட்டப்புக்காக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்களாம். ஆரம்ப கால ரஜினியைப்போலவே அவர் மிகவும் துடிப்பாக இருப்பாராம். இதில் படைத்தளபதியாக வரும் கோச்சடையானுக்கு நன்றாக பரதம் ஆடவும் தெரியுமாம். அதனால் அவர் பரதம் ஆடுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம். மேலும், தற்போது இறுதிகட்டப்பணிகள் நடந்து வரும் அப்படத்தை ஜூன் மாதத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். ஆங்கிலத்தில் வெளியான அவதார், டின் டின் படங்களைப்போன்று அனிமேஷன் படமாக உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் பட்ஜெட் தற்போது ஏற்கனவே திட்டமிட்ட 100 கோடியையும் தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.