குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
'எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ்' ஆகிய படங்களை இயக்கிய ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கருடன்'. இப்படம் இம்மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி படம் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் டைட்டில் டீசர் ஒன்று ஜனவரி மாதம் வெளியானது. அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. 59 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அந்த டீசர். அதுவே படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது.
தற்போது இப்படத்தின் வியாபாரமும் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக வியாபார உரிமை மட்டும் சுமார் 15 கோடிக்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாம். வெளிநாட்டு உரிமையும் குறிப்பிடும் விலைக்கே விற்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.
இந்த மாதத்தில் வெளியாக உள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் இந்தப் படமும் ஒன்றாக இருக்கிறதாம். இப்படம் ஓடினால் சூரி கதையின் நாயகனாக நடித்து அடுத்து வெளிவர உள்ள 'விடுதலை 2, கொட்டுக்காளி' ஆகிய படங்களின் வியாபாரமும் சிறப்பாக நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.