லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வந்த மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து அவர் நிவின் பாலியுடன் டியர் ஸ்டூடன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த படத்தில் யஷ்க்கு ஜோடியாக இல்லாமல், அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளார்களாம். இதையடுத்து அக்கா வேடம் என்பதால் தனக்கு பத்து கோடி சம்பளம் தர வேண்டும் என்று நயன்தாரா கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. வழக்கத்தை விட அதிகமான சம்பளம் வேண்டும் என்று நயன்தாரா கூறி வருவதால், டாக்சிக் படத்தில் அவர் நடிப்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படுகிறது.