பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா | பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு |

இளன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கவின், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'ஸ்டார்'. வெளியீட்டிற்கு முன்பாகவே இப்படத்திற்கு குறிப்பிடும்படியான வரவேற்பு இருந்தது. அதனால், படம் வெளியான நேற்று இப்படத்திற்கான முன்பதிவுகளும் சிறப்பாக இருந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாள் வசூலாக சுமார் 3 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கவின் நடித்து இதற்கு முன்பு வெளியான 'டாடா' படம் கடந்த வருடத்தின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்தப் படம் போல இந்தப் படமும் நல்ல வசூலைப் பெறுமா என்பது இனிமேல்தான் தெரியும்.
அடுத்த வளரும் தமிழ் ஹீரோக்களில் கவின் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.