'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வசந்த பாலன். ஆனால் அவரது சமீபத்திய படங்களான ஜெயில், அநீதி தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்கி உள்ளார். இதற்கு 'தலைமைச் செயலகம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமாரின் ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வருகிற 17ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் இந்த தொடர் அரசியல் பற்றி பேசுகிறது. கதைப்படி தமிழக முதல்வர் அருணாசலம், தன் மீதான 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கை எதிர்கொள்கிறார். இதனால் அவரை சுற்றி உள்ளவர்கள், அவரை வழக்கில் சிக்க வைத்து விட்டு முதல்வர் பதவியை அடைய நினைக்கிறார்கள். இதற்கிடையில் ஒரு முக்கியமான அரசியல் கொலையும் நடக்கிறது. இவற்றை கொண்டு பொலிட்டிக்கல் த்ரில்லராக தொடரை உருவாக்கி உள்ளார் வசந்தபாலன்.




