'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
சிலம்பாட்டம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனா கான். தொடர்ந்து ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியவர் அதன்பின்னர் கோலிவுட்டின் பீல்ட் அவுட் நடிகைகளின் பட்டியலில் சேர்ந்தார். தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை வைத்து மலையாளத்தில் உருவாகியுள்ள க்ளைமாக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் நடிகையின் டைரி எனும் பெயரில் வெளிவர இருக்கிறது. இவர் அளித்த பேட்டி இதோ...
1. "நடிகையின் டைரி படம் மூலம், உங்கள் கால்ஷீட்டைரி நிறையும் என, நினைக்கிறீர்களா?
நிச்சயமாக நம்புகிறேன். இதுவரை, நான் நடித்த படங்களைவிட, இந்தப் படத்தில்கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். இப்படம், என் கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்ற, எதிர்பார்ப்பு உள்ளது.
2. "சில்க் ஸ்மிதா வேடத்திற்கு, நீங்கள் பொருத்தமானவர்தானா?
பொருத்தமாக இருப்பேன் என நம்பித்தான், சில்க் கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளனர். "சிலக் ஸ்மிதா, செக்ஸியானவர். அவரின் மேனரிஸம், பாடி லாங்குவேஜ், நடன அசைவுகள்,
எல்லாமே டாப்பாக இருக்கும். என்னால் முடிந்தவரை சிறப்பாக நடித்திருக்கிறேன்.
3. நடிகைகள் வாழ்வில் மட்டும், அடிக்கடி புயல் வீசுகிறதே?
நடிகைகள், புகழ் வெளிச்சத்தில், தங்களை சுற்றி நடக்கும் நிஜத்தை புரிந்து கொள்ள தவறி விடுகின்றனர். படங்களில் துணிச்சலானவராக நடித்தால் மட்டும் போதாது. அனைத்து பிரச்னைகளையும், எதிர்கொண்டு ஜெயிக்கவும் வேண்டும்.
4. விருது வாங்கும் ஆசை உள்ளதா?
படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என்கின்றனர். கிடைத்தால் சந்தோஷம். ரசிகர்களின் கைதட்டலை தான், பெரிய விருதாக நான் கருதுகிறேன்.
5. இந்தியில் சல்மான் கானுடன் நடித்த அனுபவம் பற்றி?
உண்மையிலேயே, நான் அதிர்ஷ்டசாலிதான். படம் நன்றாக வந்திருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியை ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். இப்படத்தின் மூலம், என்னுடைய திரையுலக வாழ்க்கை. டாப் கியருக்கு எகிறும் என்ற நம்பிக்கையுள்ளது.