ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
'பாரத ரத்னா' விருது பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் நினைவாக அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்த விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பத்மினி கோலாபுரி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு வழங்குவதாக அறிவித்தார்கள்.
இந்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் “கேட்போரின் ஆன்மாவை கரையச் செய்யும் பாடகரின் நினைவாக இந்த விருதைப் பெறுவது அதிர்ஷ்டம்” என்று நெகிழ்ந்து பேசினார்.
“இப்படியொரு பெருமை எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே சந்தோஷம்” என்றார் ரஹ்மான்.