சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
சினிமா பிரபலங்கள், எத்தனை வீடுகள் வைத்திருக்கிறார்கள், எத்தனை கார்கள் வைத்திருக்கிறார்கள், அவர்கள் வருமானம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள சினிமா ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், அது பற்றி வெளியாகும் பல தகவல்களில் உண்மை இருக்காது. பொய்யான தகவல்களே அதிகம் இருக்கும்.
சினிமா பிரபலங்கள் தேர்தலில் நின்றால் மட்டுமே அவர்களது உண்மையான சொத்து விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அவர்களது சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அந்த விதத்தில் தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட, பித்தாவரம் தொகுதியில் அவரது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விவரங்களையும் 'அபிடவிட்'டில் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு சொந்தமான வாகனங்கள் மட்டும் 11 உள்ளது. அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் 14 கோடி. 32 லட்ச ரூபாய் மதிப்புள்ள 'ஹார்லி டேவிட்சன் பைக்', 5 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார், இரண்டரை கோடி மதிப்புள்ள பென்ஸ் மேபாட்ச் எஸ் கிளாஸ் 560 கார் ஒன்று, டெயோட்டா லான்ட் க்ரூசர் ஒன்று, 1 கோடி மதிப்புள்ள டொயோட்டா வெல்பையர் கார் ஒன்று மற்றும் ஒரு பென்ஸ் கார், மூன்று மஹிந்திரா ஸ்கார்ப்பியோ, ஒரு டாடா யோதா, ஒரு ஜீப், என 11 வாகனங்களை வைத்துள்ளார்.
தனிப்பட்ட நபர்களிடமிருந்து பெற்ற கடன் 46 கோடி ரூபாய், வங்கிகளிடமிருந்து பெற்ற கடன் 17 கோடி ரூபாய் என்றும், 47 கோடி ரூபாய் வருமான வரி கட்டியுள்ளதாகவும், 26 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்தியுள்ளதாகவும் 17 கோடி ரூபாய் ஜனசேனா கட்சிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாணின் இந்த சொத்து விவகாரம் குறித்துதான் டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.