‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் | அஜித்துக்கு பத்ம பூஷன் விருது: திரையுலகினர் வாழ்த்து | 50 நாளை நிறைவு செய்த 'புஷ்பா 2' | அரசியலுக்கு வருகிறாரா திரிஷா? லேட்டஸ்ட் தகவல் | ராஜமவுலி படத்துக்காக சிங்கத்துடன் சண்டை போடும் மகேஷ் பாபு! | ஹிந்தி ஆடியன்சை குறி வைக்கும் நாகசைதன்யா- சாய் பல்லவியின் தண்டேல்! | ஆங்கிலத்திலும் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்-2 |
அஜித் நடிப்பில் தீனா என்ற படத்தை இயக்கி அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் பிறகு மிரட்டல், ரெட்ட தல என்ற பெயரில் அவரை வைத்து இரண்டு படங்களை இயக்க இருந்தார் முருகதாஸ். ஆனால் சில காரணங்களால் அந்த படங்களில் இருந்து அஜித் நடிக்க முடியவில்லை. அதில் மிரட்டல் என்ற கதையைத்தான் பின்னர் கஜினி என்ற பெயரில் சூர்யாவை வைத்து இயக்கினார் முருகதாஸ்.
இந்த நிலையில் ரெட்ட தல என்ற தலைப்பில் படம் இயக்காமல் 10 ஆண்டுகளாக அந்த டைட்டிலை தன் வசம் வைத்திருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது தன்னுடைய உதவியாளர் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு அந்த தலைப்பை கொடுத்திருக்கிறார். இந்த ரெட்ட தல படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னாணி ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.