தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் | ‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ | ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர் |

பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். கடைசியாக தம்பி ராமையா மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன், பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கும், சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், சீமான் ஆகியோர் முன்னின்று நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதுதொடர்பான போட்டோக்களை பகிர்ந்து திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும், திருமணத்தை சிறப்பாக நடத்தி கொடுத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சேரன்.




