டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் படிக்க வைத்த பல மாணவர்கள் தற்போது சம்பாதிக்க தொடங்கி இருப்பதை தொடர்ந்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது மாற்றம் என்ற பெயரில் ஒரு புதிய சேவை மையத்தை மே 1ம் தேதி முதல் தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள அவர், நான் உதவி செய்த மாணவர்கள் இப்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதனால் எதிர்காலத்தில் நான் செய்துவரும் இந்த சேவையானது மாற்றம் என்ற இந்த சேவை மையத்தின் மூலம் இன்னும் பெரிய அளவில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.