முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' |
தென்னிந்திய படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இதையடுத்து தொடர்ந்து ஹிந்தியில் நடிப்பதற்கும் அவர் முயற்சி எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் சோசியல் மீடியாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த ஒரு செய்தி வைரலாகிறது.
கடந்த சில ஆரண்டுகளாக கேரளாவை சேர்ந்த ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், தற்போது கீர்த்தி சுரேஷ் 30 வயதை எட்டி உள்ளதால் திருமணம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனபோதிலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. கீர்த்தி சுரேஷ் குறித்து ஏற்கனவே சிலமுறை இதுபோன்று திருமணம் செய்திகள் வெளியாகி இருப்பதால் இதுகுறித்து அவரே விளக்கம் கொடுக்கும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும்.