எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு காலத்தில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால், தற்போது தொடர் தோல்வியில் தவித்து வருகிறார். அக்ஷய் குமார், டைகர் ஷெராப், பிருத்விராஜ், மனுஷி சில்லர் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'படே மியான் சோட்டோ மியான்' படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. சுமார் 350 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படம் 7 நாட்களுக்குப் பிறகு 100 கோடியை நெருங்குவதாகச் சொல்கிறார்கள். இன்னும் 200 கோடி வசூலித்தால் கூட படம் லாபம் தர வாய்ப்பில்லையாம்.
பாலிவுட்டில் அக்ஷய் தொடர்ந்து தோல்விகளையே தந்து கொண்டிருக்கிறார். 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'லட்சுமி'யில் ஆரம்பமானது அவரது தோல்வி. அதன் பின் வந்த 10 படங்களுமே தோல்விப் படங்கள்தான். இருந்தாலும் கைவசம் ஐந்தாறு படங்களை வைத்துள்ளார் அக்ஷய்.
அவரது அடுத்த வெளியீடாக ஜுலை மாதம் 12ம் தேதி 'சர்பிரா' படம் வெளியாக உள்ளது. தமிழில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்தப் படம். இப்படமாவது அவரைக் காப்பாற்றுமா என்று அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.




