'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்டவர் பாடகி லதா மங்கேஷ்கர். பாரத ரத்னா விருது பெற்ற அவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது 92-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது நினைவாக 'லதா தீனாநாத் மங்கேஷ்கர்' விருது வழங்கி வருகிறார்கள்.
தேசத்திற்கும், சமூகத்திற்கும், கலைக்கும், இசைக்கும் தன்னலமற்ற சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போன்ஸ்லேவும் இந்த விருதை பெற்றார்.
இந்த வருடம் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது அமிதாப்பச்சனுக்கும், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர். லதா மங்கேஷ்கரின் தந்தை தீனாநாத் நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி இந்த விருது வழங்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இவர்களுடன் மூத்த மராத்தி நடிகர் அசோக் சரப், நடிகை பத்மினி கோலாபுரி, பாடகர் ரூப்குமார் ரத்தோட், மராத்தி நாடக நடிகர் நடிகர் அதுல் பார்ச்சுரே, எழுத்தாளர் மஞ்சிரி பாட்கே, நடிகர் ரந்தீப் ஹூடா ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.
இதனை பாடகி உஷா மங்கேஷ்கர், ஆதிநாத் மங்கேஷ்கர் அறிவித்தனர்.