மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' | சூர்யாவின் கங்குவா ரிலீஸ் - இரண்டு தேதிகளை திட்டமிடும் படக்குழு! | டிசம்பரில் வெளியாகும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி! | கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் அஜித்தின் விடாமுயற்சி! |
சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 4555 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவர்கள் தவிர கலை, இலக்கியம், விளையாட்டு உட்பட பல துறைகளைச் சார்ந்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கலைத் துறையில் இருந்து நடிகர் ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மகன் டாக்டர் பட்டம் பெற்றது குறித்து தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக்கழகம் ராம் சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது எனக்கு ஒரு தந்தையாக பெருமையடைய வைக்கிறது. மகன்கள் இப்படியான சாதனைகளை நிகழ்த்தும்போதுதான் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். லவ் யூ மை டியர் டாக்டர் ராம் சரண்” எனப் பதிவிட்டுள்ளார்.