விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் நடிகர் விஜய் ‛தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவக்கினார். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதாகவும் அறிவித்தார். இதற்கிடையே நடிகர் விஷாலும் அரசியலுக்கு வருவேன் என அடிக்கடி கூறி வந்தார். இந்த நிலையில் அவரும் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
வடபழனியில் செய்தியாளர்களிடம் விஷால் கூறுகையில், 2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு புதிய அரசியல் கட்சியை துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயரும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.