'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசையமைப்பாளர்களாக இருந்து கதாநாயகர்களாக மாறிய விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் இருவரும் வரும் ஏப்ரல் 11ம் தேதி நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளார்கள். அன்றைய தினம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள 'ரோமியோ', ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'டியர்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.
இருவருமே கதாநாயகர்களாக மாறிய பின் தொடர்ச்சியாக சில பல படங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இதுவரையில் 15 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் 21 படங்களில் நடித்துள்ளார். இருவருமே கைவசம் நான்கைந்து படங்களை வைத்துள்ளனர். அவை வரும் மாதங்களில் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 11ல் வெளியாகும் அவர்களது இரண்டு படங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளது. இரண்டுமே ஆங்கிலப் பெயர் கொண்ட படங்கள். இரண்டு படங்களுமே காதல் படங்கள். இரண்டு படங்களையும் 'டியர் ரோமியோ' என்று சொல்லி ரசிகர்கள் ரசிப்பார்களா ?, காத்திருப்போம்.
ஏப்ரல் 12ம் தேதியன்று “அறிவியல், வல்லவன் வகுத்ததடா, வா பகண்டையா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.