செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது 'அக்கா' என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். தர்மராஜ் ஷெட்டி இயக்கும் இத்தொடரில் 'கபாலி' பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்துள்ளது.
அது குறித்து கீர்த்தி சுரேஷ், “கேரளாவில் என்னுடைய வனவாசம் முடிந்து 40 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு சோஷியல் மீடியாவிற்கும் திரும்பிவிட்டேன். அற்புதமான படப்பிடிப்பை முடித்து வீட்டுக்கு வந்துள்ளேன். என்னுடைய அடுத்த படப்பிடிப்புகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. ஆச்சரியமாக வெயிலின் சூட்டைத் தணிக்க மிஸ் மழையும் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். மீண்டும் இணைவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தி தற்போது தமிழில் 'ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.