லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' | படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு |

தமிழில் பொங்கியெழு மனோகரா, சைத்தான் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை அருந்ததி நாயர். கடந்த மாதம் இவர் தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்றபோது வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதில் தூக்கி வீசப்பட்ட அருந்ததி நாயர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கோமாவில் இருக்கும் அவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். தினமும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை அவரது குடும்பத்தார் செலவு செய்து வருவதோடு, இதுவரை 40 லட்சம் ரூபாய் செலவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது கவலைக்கிடமான நிலையில் இருந்து வரும் அருந்ததியின் சிகிச்சைக்கு திரைஉலகினர் உதவ முன்வருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.




