நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், மா.பொ.சி என்ற படத்தை தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிடுகிறார். கன்னி மாடம் என்ற படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட் இயக்கும் இந்த படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். தற்போது மா.பொ.சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் சாக்பீசால் எழுதிக் கொண்டிருக்கிறார் விமல். இதை வைத்து பார்க்கும் போது அவர் படத்தில் ஆசிரியராக நடிப்பது தெரிகிறது. அதோடு அவரது பின்னணியில் பாரதியார், திருவள்ளுவர் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, விமலின் முகத்தில் அடிபட்ட தழும்புகள் ரத்தம் வழிந்த நிலையில் உள்ளன. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது.